கோவை:சீருடைப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் போலீஸ் பணியிடங்களுக்கான தேர்வு, கோவையில் இன்று 6 மையங்களில் நடக்கிறது.
இரண்டாம் நிலை காவலர்கள், சிறை வார்டன்கள், தீயணைப்பு வீரர் பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது. காலை 10:00 முதல் பகல் 12:40 மணி வரை தேர்வு நடக்கிறது.
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த 12 ஆயிரத்து 500 பேர், கோவை மாநகரில் இன்று நடக்கும் தேர்வில் பங்கேற்கின்றனர். தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.