அடுத்த மாதம் 7ம் தேதி பார்லிமென்டின் குளிர்கால கூட்டத் தொடர் துவங்குகிறது. இதில், தி.மு.க., கூட்டணி எம்.பி.,க்கள் தமிழக கவர்னர் ரவிக்கு எதிராக பேசப்போகின்றனராம்.

இந்நிலையில், பார்லிமென்ட் கூட்டத்தொடரை முதல் மூன்று நாட்களுக்கு முடக்க தி.மு.க., தன் கூட்டணி கட்சிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.ஆனால், சில மூத்த தி.மு.க., - எம்.பி.,க்கள் முதல் மூன்று நாட்கள் கூட்டத்தொடரில் பங்கேற்பது சந்தேகம் என சொல்லப்படுகிறது. இந்த எம்.பி.,க்கள் சொந்தமாக பல்கலைகள் மற்றும் கல்லுாரிகள்நடத்தி வருகின்றனர்.
இவர்கள், எதற்கு தேவையில்லாமல் கவர்னரை பகைத்துக் கொள்ள வேண்டும் என்கின்றனராம். இவர்களுக்கு பார்லியில் கவர்னருக்கு எதிராக பேச விருப்பமில்லையாம்.இன்னொரு பக்கம் வேறொரு விஷயமும் பேசப்படுகிறது. தமிழக கவர்னர் ரவி அடிக்கடி புதுடில்லி செல்கிறார். அப்போது தி.மு.க.,வின் மூன்று சீனியர் தலைவர்கள் கவர்னரை ரகசியமாக சந்தித்து பேசுகின்றனராம். இந்த தி.மு.க., பிரமுகர்கள், கட்சியில் என்ன நடக்கிறது என்பதை கவர்னருக்கு தெரிவித்து வருகின்றனராம்.

இந்த விவகாரம் தி.மு.க., தலைமைக்கு தெரிய வந்து அதிர்ச்சிக்குள்ளானதாக சொல்லப் படுகிறது.இந்த தலைவர்களை சந்திப்பதற்குத்தான் கவர்னர் அடிக்கடி புதுடில்லி வருகிறார் என்கிறது தேசிய அரசியல் வட்டாரம்.