நாம் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளும் உப்பு, இறைச்சி, சில பழங்களில் அயோடின் தாதுக்கள் உள்ளன. நமது உடல் உறுப்புகள் சீராக இயங்குவதற்கு இந்த அயோடின் பெரிதும் உதவுகிறது. அயோடின் குறைபாடு ஏற்படுவதன் மூலம் 'ஹைப்போதைராய்டிசம்' மற்றும் மலட்டுத்தன்மை போன்ற பல பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றன.
குழந்தைப்பேறுக்கு தயாராகும் தம்பதியினர் அந்த சமயத்தில் எடுத்துக்கொள்ளும் உணவின் மூலமாக நாளொன்றுக்கு 150 மைக்ரோ கிராம் அயோடின் உடலில் சேருமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக பெண்கள், கர்ப்ப காலத்திலும் ஆரம்பகால குழந்தைப் பருவத்திலும் அயோடின் தேவையை சரியான முறையில் பூர்த்திசெய்ய வேண்டும்.
உலக சுகாதார அமைப்பின் தகவல் படி கர்ப்ப காலத்திலும், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் பெண்களுக்கு அயோடினின் தேவை சற்று அதிகமாக அதாவது 220 - 290 மைக்ரோ கிராம் அளவு தேவைப்படும். சமீபத்தில் நடந்த ஆராய்ச்சிகளில் கரு முட்டைகளும் அயோடினை உட்கிரகிக்கும் என தெரியவந்துள்ளது. கரு முட்டைக்கு தேவையான அயோடின் கிடைக்காதபட்சத்தில் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது தவிர அனைவருக்கும் தைராய்டு ஹார்மோன் சேர்க்கை நடைபெறுவதற்கு அயோடின் அடிப்படையான ஒன்று. இது உடலின் வளர்ச்சிதை மாற்றம் சரியாக நடக்க, உடல் எடை சீராக இருக்க, கருமுட்டைகள் ஆரோக்கியமாக வளர்வது போன்ற பலவற்றிற்கு பெரிதும் உதவிகரமாக உள்ளது. மேலும், அயோடின் குறைப்பாட்டால் ஆண்களில் விந்தணுக்களின் எண்ணிக்கை சரியும். எனவே அயோடின் உள்ள உப்பை பயன்படுத்துவது, பால், பாலாடைக்கட்டி, யோகர்ட், முட்டை, சிக்கன், மீன் போன்றவற்றை உணவின் ஒரு பகுதியாக சேர்ப்பதன் மூலம் அயோடின் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக்கொள்ள முடியும்.
நாம் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளும் உப்பு, இறைச்சி, சில பழங்களில் அயோடின் தாதுக்கள் உள்ளன. நமது உடல் உறுப்புகள் சீராக இயங்குவதற்கு இந்த அயோடின் பெரிதும் உதவுகிறது. அயோடின் குறைபாடு
Advertisement