வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சண்டிகர்-பஞ்சாபில் உள்ள பாக்., எல்லையிலிருந்து, இந்திய பகுதிக்குள் நுழைந்த 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா விமானத்தை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்.
![]()
|
பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில், பாக்., எல்லையை ஒட்டி உள்ள டயோக் கிராமத்திற்கு அருகே, எல்லை பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பாகிஸ்தான் பகுதியிலிருந்து வந்த ஆளில்லா விமானம் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற போது, பாதுகாப்பு படையினர் அதை சுட்டு வீழ்த்தினர்.
நேற்று நடைபெற்ற தேடுதல் நடவடிக்கையில், நான்கு இறக்கைகள் கொண்ட சீன ட்ரோன் ஒன்று, சேதமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
![]()
|
இதற்கிடையே பஞ்சாபின் குருஹர்சஹாயில் உள்ள எல்லைப் பகுதியில் நேற்று பாகிஸ்தானில் இருந்து பறந்து வந்த பலுானை, எல்லை பாதுகாப்பு படையினர் மீட்டனர்.
இதில், பாகிஸ்தான் 10 ரூபாய் நோட்டு ஒன்றும், மொபைல் எண் எழுதப்பட்ட பேப்பர் ஒன்றும் இணைக்கப்பட்டிருந்தது.
இந்திய எல்லைப் பகுதியில் நடந்த இந்த இரண்டு சம்பவங்களும் ஏதேனும் பயங்கரவாத தாக்குதலுக்கான திட்டமாக இருக்கலாமா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement