சென்னை:தி.நகரில், திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் பத்மாவதி தாயார் பிரம்மோற்சவம், ஆண்டுதோறும் விமரிசையாக நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவம், 19ல் துவங்கியது. தொடர்ந்து, தினமும் வாகன புறப்பாடு நடக்கிறது. விழாவின் முக்கிய நாளான, நேற்று முன்தினம் கருடசேவை உற்சவம் நடந்தது.
உற்சவர் பத்மாவதி தாயார், நேற்று காலை சூரிய பிரபையிலும், மாலை, சந்திர பிரபையிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முக்கிய விழாவான பஞ்சமி தீர்த்தத்துடன், பிரம்மோற்சவம் நாளை நிறைவு பெறுகிறது. நாளை மறுநாள் புஷ்பாபிஷேகம் நடக்கிறது.