வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: நாடு முழுதும் பல அரசியல்வாதிகள் அமலாக்கத்துறை விசாரணையில் சிக்கியுள்ளனர். இந்த விசாரணை அமைப்பு தமிழக அரசியல்வாதிகள் மீது சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.

இவர்கள் மீதான வழக்குகளை கவனிக்க, ஒரு தமிழக அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளாராம். இவர், இந்த வழக்குகளின் விசாரணை எந்த நிலையில் இருக்கிறது என்பது தொடர்பாக ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி பல விஷயங்களை விவாதித்தாராம்.

தமிழகத்தில், 12 அரசியல்வாதிகள் மீது அமலாக்கத்துறை வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில் சில வழக்குகள் மிகவும் சிக்கலானவை. பணப்பரிமாற்றம் தொடர்பானது. இது தொடர்பாக, அமலாக்கத்துறை பல ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாம். அதிலும் குறிப்பாக மூன்று எம்.பி.,க்கள் மீதுள்ள வழக்குகள் படு 'ஸ்ட்ராங்க்' என்கிறது அமலாக்கத்துறை வட்டாரம்.
'இன்னும் சிறிது காலம் காத்திருங்கள்; பெரும் அதிரடி காத்திருக்கிறது; அடுத்த வருட துவக்கத்தில் பல சரவெடி நடவடிக்கைகள் இருக்கும்' என்கின்றனர் அமலாக்கத்துறை அதிகாரிகள்.