வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை--செலவினத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், 11 ஆயிரம் கோடி ரூபாய்க்கான வட்டியை, 2 சதவீதம் வரை குறைக்குமாறு, கடன் வழங்கிய வங்கிகளை, தமிழக மின் வாரியம் வலியுறுத்தி உள்ளது.
![]()
|
தமிழக மின் வாரியத்திற்கு மின் கட்டணம், அரசு மானியம் வாயிலாக வருவாய் கிடைக்கிறது. மின் கொள்முதல், ஊழியர்கள் சம்பளம், கடனுக்கு வட்டி என, பல வகையில் செலவு செய்யப்படுகிறது. வரவை விட, செலவு அதிகம் உள்ளது.
பல ஆண்டுகளாக, ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பை சந்தித்து வரும் மின் வாரியம், புதிய மின் திட்டங்கள், மூலதன செலவுகளுக்காக, மத்திய அரசின் நிதி நிறுவனங்கள், தேசிய மற்றும் தனியார் வங்கிகளிடம் கடன் வாங்குகிறது.
தற்போது, மின் வாரியத்தின் கடன் 1.59 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. அதில் 15 வங்கிகளிடம் இருந்து, 11 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கடன் வாங்கப்பட்டுள்ளது. இதற்கு, 11 சதவீதம் என்றளவில் வட்டி செலுத்தப்பட்டது.
![]()
|
கடும் நிதி நெருக்கடியில் இருப்பதால் வட்டியை குறைக்குமாறு, வங்கிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த ஆண்டில் பெரும்பாலான வங்கிகள் வட்டியை, 9.50 - -10 சதவீதம் என்றளவில் குறைத்தன.
இந்நிலையில், தற்போது கடனுக்காக செலுத்தக்கூடிய வட்டியை, மேலும் 2 சதவீதம் வரை குறைக்குமாறு, வங்கிகளை மின் வாரியம் வலியுறுத்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement