சென்னை,-'தி.மு.க., ஆட்சியில் கால்நடைகளுக்கும் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி புகார் கூறியுள்ளார்.
![]()
|
அவரது அறிக்கை:
ஒவ்வொரு ஆண்டும் பருவகால மாற்றத்துக்கு ஏற்ப, கால்நடைகளுக்கும், கோழிகளுக்கும், மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, தேவையான தடுப்பு மருந்துகள் போடப்படும்.
கால்நடைகளுக்கான மருந்து பொருட்கள், தமிழக மருத்துவப் பணிகள் கழகம் வழியாக மொத்தமாக வாங்கப்பட்டு, மாநிலம் முழுதும் அனுப்பப்படும். ஆனால், இதுவரை தடுப்பு மருந்துகள் வாங்கவில்லை.
மாடுகளுக்கு வேண்டிய மருந்துகளை, இதுவரை வாங்காததால், இந்த ஆண்டு தமிழகம் முழுதும், மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்படவில்லை.
இதனால், பல பகுதிகளில் மாடுகளுக்கு நாக்கிலும், வாயிலும், அம்மை நோய் தாக்கி உள்ளது.
ஈரோடில் மட்டும், நுாற்றுக்கணக்கான மாடுகள், தடுப்பூசி போடாத தால், அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக, அப்பகுதி மக்கள், கால்நடை மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளனர்.
அதற்கு அவர்கள், 'தடுப்பு மருந்து அரசால் வழங்கப்படவில்லை' எனக் கூறி உள்ளனர்.
மேலும் ஆடுகளுக்கு போட வேண்டிய தடுப்பு மருந்துகளை, மாடுகளுக்கு செலுத்தி வருகின்றனர்.
'ஆறறிவு உள்ளவர்கள் மட்டுமல்ல, ஐந்தறிவுள்ள கால்நடைகளின் வயிற்றிலும் அடிப்போம்' என்ற குறிக்கோளோடு, முதல்வர் செயல்பட்டு வருகிறார்.
![]()
|
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தாலுகாவில், செட்டிநாடு கால்நடைப் பண்ணை உள்ளது. இதை மூடும் முயற்சியில் அரசு ஈடுபடுவதாக, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாட்டுப் பண்ணையை தொடர்ந்து நடத்த வேண்டும்.
சேலம் மாவட்டம், தலைவாசல் கால்நடைப் பூங்காவில், சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை உண்டாக்கும் தோல் பதனிடும் தொழிற்சாலை ஆரம்பிக்கும் முயற்சியை, உடனே கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement