சென்னை,-சங்கீத நாடக அகாடமியின் தேசிய விருதுக்கு தேர்வாகி உள்ள ஒய்.ஜி.மகேந்திரனுக்கு, நடிகர் ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாடகத் துறையில் சிறந்த பங்களிப்பு கொடுத்ததற்காக, நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு, 2021ம் ஆண்டுக்கான சங்கீத நாடக அகாடமியின் தேசிய விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து, நடிகர் ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சங்கீத் நாடக அகாடமியின் தேசிய விருதைப் பெற்றதற்காகவும், சிறந்து விளங்கவும் ஒய்.ஜி.மகேந்திரனை வாழ்த்துகிறேன்' என கூறியுள்ளார்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கையில், 'கடந்த 61 ஆண்டுகளாக 5,000க்கும் மேற்பட்ட நாடகங்களில் தோன்றி, பல வேடங்களில் நம்மை மகிழ்வித்த மகேந்திரனுக்கு சங்கீத நாடக அகாடமி விருது வழங்கப்பட்ட செய்தியை அறிந்து மகிழ்ந்தேன். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்' என கூறியுள்ளார்.