சென்னை--தமிழகத்தில் நேற்று வரை, 8.15 லட்சம் நுகர்வோர் தங்களின் மின் இணைப்பு எண்ணுடன், 'ஆதார்' எண்ணை இணைத்துள்ளனர்.
மத்திய அரசு, மானிய திட்டங்களின் இடம்பெறும் பயனாளிகளின் ஆதார் எண்ணை, சம்பந்தப்பட்ட திட்டத்துடன் இணைக்குமாறு, மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது.
அதை பின்பற்றி, இலவச மற்றும் மானிய விலை மின்சாரம் வழங்கப்படும் 2.34 கோடி வீடுகள்; 22.87 லட்சம் விவசாயம்; 9.75 லட்சம் குடிசை வீடுகள்; 1.65 லட்சம் விசைத்தறி ஆகிய நுகர்வோரின் மின் இணைப்பு எண்களை, 'ஆதார்' எண்ணுடன் இணைக்கும் பணியை, மின் வாரியம் 15ம் தேதி துவக்கியது.
நுகர்வோர், மின் வாரியத்தின், www.tangedco.gov.in என்ற இணையதளம், மின் கட்டண மையங் களுக்கு சென்று, ஆதார் எண்ணை இணைக்கலாம். நேற்று வரை, 8.15 லட்சம் பேர் தங்களின் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். பலரும் ஆதாரை இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.