பெங்களூரு-''தட்சிண கன்னடாவின் கத்ரி கோவிலை தகர்க்க வெடி பொருட்களை கொண்டு சென்ற பயங்கரவாதி ஷாரிக்கிடம், மங்களூரை சுற்றியுள்ள பல கோவில்களின் வரைபடம் உள்ளது,'' என மத்திய அமைச்சர் ஷோபா தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம், பெங்களூரில் அவர் கூறியதாவது:
ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பில் 40க்கும் மேற்பட்டோருக்கு ஷாரிக் பயிற்சி அளித்துள்ளார். இவரே ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பால் பயிற்சி பெற்றவர்.
கடலோரத்தில் கோவில் தகர்ப்பு, வகுப்புவாத கலவரத்தை ஏற்படுத்துவதே அவரது நோக்கம்.கேரளா, கர்நாடகாவில் இருந்து கடலோரமாக வந்து பி.எப்.ஐ.,யில் செயல்பட்டவர்கள், பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகின்றனர்.
என்.ஐ.ஏ., விசாரணையில் பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. மாநிலத்தில் என்.ஐ.ஏ., குழு முகாமிட்டுள்ளது. என்.ஐ.ஏ., குழுவுக்கு கர்நாடக போலீஸ் துறை ஒத்துழைக்க வேண்டும்.
தட்சிண கன்னடாவின் கத்ரி கோவிலை தகர்க்க வெடி பொருட்களை கொண்டு சென்ற பயங்கரவாதி ஷாரிக்கிடம், மங்களூரை சுற்றியுள்ள பல கோவில்களின் வரைபடம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.