கொள்ளிடத்தில் குளித்தவர் முதலை கடித்து பரிதாப பலி

Added : நவ 27, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
சிதம்பரம்,-கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞரை முதலை இழுத்துச் சென்ற நிலையில், நான்கு மணி நேரத்திற்கு பிறகு அவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த வடக்கு வேலக்குடி பகுதியைச் சேர்ந்தவர் பக்கிரி மகன் திருமலை, 18. இவர், நேற்று பிற்பகல், 3:00 மணியளவில், விட்டின் பின்புறம் உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றில் நண்பர்களுடன்
கொள்ளிடம், சிதம்பரம், முதலை, மாணவர், பலிசிதம்பரம்,-கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞரை முதலை இழுத்துச் சென்ற நிலையில், நான்கு மணி நேரத்திற்கு பிறகு அவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த வடக்கு வேலக்குடி பகுதியைச் சேர்ந்தவர் பக்கிரி மகன் திருமலை, 18. இவர், நேற்று பிற்பகல், 3:00 மணியளவில், விட்டின் பின்புறம் உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென தண்ணீரில் இருந்து வந்த, 15 அடி நீளமுள்ள பெரிய முதலை, கரையோரம் குளித்துக் கொண்டிருந்த திருமலையின் கையை கடித்து, ஆற்றிற்குள் இழுத்துச் சென்றது. அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அலறியடித்து கரையேறி, கூச்சலிட்டனர்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, கம்பு மற்றும் கற்களை எடுத்து வீசி முதலையை தாக்கி, மாணவரை மீட்க முயன்றனர்.

அதற்குள் முதலை புதருக்குள் சென்று மறைந்தது. உள்ளூர் மீனவர்கள் மற்றும் சிதம்பரம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, படகில் சென்று திருமலையை தேடினர்.

நான்கு மணி நேர தேடலுக்கு பின், இரவு, 7:00 மணியளவில் இறந்த நிலையில் திருமலையின் உடலை மீட்டனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சிதம்பரம், அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

தொடரும் பலி

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் இதுவரை முதலை கடித்து 20க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்; 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதுபோன்ற தொடர் சம்பவங்களால், இப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான முதலை பண்ணை அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (10)

கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
27-நவ-202219:10:09 IST Report Abuse
கல்யாணராமன் சு. ஒருவேளை இந்த முதலை கூவத்திலே 1971 லிருந்து 1977 வரைக்கும் இருந்த முதலையா இருக்குமோ ?? இப்போ கொள்ளிடத்துக்கு அந்த முதலை வந்திடுச்சுனா, கூவத்தை சுத்தப்படுத்தலாமில்லே ?
Rate this:
Cancel
NandaIndia, ஹிந்து என்று சொல்லி தலை நிமிர்வோம் தீயமுக என்னும் ஆள் முழுங்கி முதலை இருக்கும்போது இன்னொரு முதலைக்கு என்ன வேலை. விவரம் போதாத முதலையாக இருக்கும் போலிருக்கிறது. ஜெய் ஹிந்த்
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
27-நவ-202216:03:21 IST Report Abuse
Vijay D Ratnam அடக்கொடுமையே, 18 வயது இளைஞன் பலி. சீர்காழி சிதம்பரம் இடையே கொள்ளிடத்தில், அதையொட்டிய சில ஆறுகளில் இது போன்று முதலை கடித்து உயிரிழப்பது புதிதல்ல. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இங்கே சர்வசாதாரணமாக மனிதர்களை கால்நடைகளை முதலைகள் வேட்டையாடுவது நடந்துகொண்டுதான் இருக்கிறது. சென்ற ஆண்டு கூட நான் வல்லம்படுகை கொள்ளிடம் பாலத்தில் பயணம் மேற்கொண்டபோது ஆற்றில் மக்கள் கூட்டமாக கூடி இருந்தார்கள். என்னவென்று விசாரித்தபோது ஒரு பெரிய எருமைமாட்டை முதலை கடித்து இழுத்து சென்றுவிட்டது என்று சொன்னார்கள். இதுக்கெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது யாரையும் குற்றம் சுமத்தவும் முடியாது, இதோடு நிறக்கப்போவதுமில்லை மக்கள்தான் கவனமாக இருக்க வேண்டும்.
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
27-நவ-202219:07:41 IST Report Abuse
கல்யாணராமன் சு.திருவாரூர் - சென்னை ரயில் TTE மாதிரி, அந்த முதலையும் தப்பு பண்ணிடுச்சோ ??...
Rate this:
CHARUMATHI - KERALA,இந்தியா
27-நவ-202221:05:12 IST Report Abuse
CHARUMATHISuper...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X