வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை,-வனப்பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பியால், காட்டுத் தீ உள்ளிட்ட ஆபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதற்கு தீர்வு காண்பது குறித்து, கருத்து கேட்கும் பணியை, மத்திய வனத்துறை துவக்கி உள்ளது.
![]()
|
தேனி மாவட்டம், குரங்கணி வனப் பகுதியில், 2018 மார்ச் 11ல் காட்டுத்தீ ஏற்பட்டது. மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த, 23 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, காட்டுத் தீ சம்பவங்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்தது. தடுப்பு முயற்சிகளில் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்தி வருகின்றன.
![]()
|
இதுகுறித்து, வனத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
வனப் பகுதிகளில், தாழ்வாக செல்லும் மின் கம்பிகள், மரங்களில் உரசுவதாலும் காட்டுத்தீ ஏற்படுகிறது. எனவே, மின் கம்பிகளை உயரத்தில் அமைக்க வேண்டும்; இதை ஒட்டி உயரமான மரங்கள் வளர்வதை தடுக்க வேண்டும் என, ஆலோசனைகள் கூறப்படுகின்றன.
இது தொடர்பாக, வழிமுறைகளை தெரிவிக்குமாறு, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டன.
மாநில அரசுகள் தெரிவிக்கும் கருத்துக்கள், வல்லுனர்கள் வழிகாட்டுதல்கள் அடிப்படையில், இப்பிரச்னையை தடுக்கும் செயல்திட்டம் இறுதி செய்யப்படும்.
இதன்படி, தமிழகத்தில் எந்தெந்த வனப் பகுதிகளில், மின்கம்பிகள் திறந்த வெளியில் செல்கின்றன; அதில், எந்தெந்த இடங்களில் தாழ்வாக செல்கின்றன என்ற விபரங்கள் திரட்டப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement