வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
போர்ட் பிளேர்-'ஜி - 20' மாநாட்டை நடத்துவது தொடர்பாக, அமைப்பில் இடம்பெற்ற 20 நாடுகளின் துாதர்களுடன், அந்தமான் தீவில் மத்திய அரசு சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது.
![]()
|
உலகின் பெரும் பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பான, ஜி - ௨௦யின் தலைமை பொறுப்பை நம் நாடு ஏற்க உள்ளது. வரும், டிச., 1 முதல் இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை, இந்தியா முறைப்படி ஏற்க உள்ளது.
இது தொடர்பான முதல் ஆலோசனைக் கூட்டம், அந்தமான் நிகோபரின் சுவராஜ் தீப்பில் நேற்று நடந்தது. மத்திய அரசின் சார்பில் அதன் பிரதிநிதி 'ஷெர்பா' என்றழைக்கப்படுவார்.
இதன்படி, நிடி ஆயோக் முன்னாள் தலைவர் அமிதாப் காந்த், மத்திய அரசின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
![]()
|
ஜி - ௨௦ மாநாட்டுக்கான ஏற்பாடுகள், திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து, அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் இந்தியாவுக்கான துாதர்களுடன் அவர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது:
அனைத்து நாடுகளுக்கும் இடையே பொது இலக்கு நிர்ணயிக்கும் வகையில், அமைப்பில் சீர்திருத்தம் தேவை. அனைவருக்குமான வளர்ச்சி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடிப்படையாக வைத்து, இந்த அமைப்பின் தலைமை பொறுப்பில் இந்தியா இருக்கும்.
இந்தியாவின் முயற்சிகளுக்கு அனைத்து நாடுகளும் முழு ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement