சபரிமலையில் அதிகபட்ச கூட்டம் நாளையும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு

Added : நவ 27, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சபரிமலை,-சபரிமலையில் மண்டல சீசன் துவங்கிய பின், நேற்று சன்னிதானத்தில் அதிகபட்ச கூட்டம் காணப்பட்டது. நாளையும் அதிக அளவில் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.கேரள மாநிலம், சபரிமலையில் தற்போது, 'ஆன்லைன்' முன்பதிவு வாயிலாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தினமும், 1 லட்சத்து, 20 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், 50 முதல் 75 சதவீதம் பக்தர்கள்
சபரிமலை அதிக கூட்டம், பக்தர்கள், முன்பதிவு

சபரிமலை,-சபரிமலையில் மண்டல சீசன் துவங்கிய பின், நேற்று சன்னிதானத்தில் அதிகபட்ச கூட்டம் காணப்பட்டது. நாளையும் அதிக அளவில் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

கேரள மாநிலம், சபரிமலையில் தற்போது, 'ஆன்லைன்' முன்பதிவு வாயிலாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

தினமும், 1 லட்சத்து, 20 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், 50 முதல் 75 சதவீதம் பக்தர்கள் மட்டுமே முன்பதிவு செய்கின்றனர்.

நேற்று அதிகபட்சமாக, 87 ஆயிரத்து, 491 பேர் முன்பதிவு செய்திருந்தனர். இரவு வரை, 84 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர். இன்று, 63 ஆயிரத்து, 130 பேரும், நாளை, 85 ஆயிரத்து, 812 பேரும் முன்பதிவு செய்துள்ளனர்.

பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்தால் சன்னிதானத்தில் நீண்ட நேரம் கியூவில் நிற்பதையும், நெரிசலையும் தவிர்க்கலாம் என, தேவசம் போர்டும், போலீசும் தெரிவித்துள்ளது.

ஆட்டோ மற்றும் சரக்கு வாகனங்களை தவிர்த்து, பிற பொது போக்குவரத்து வாகனங்களை பக்தர்கள் பயன்படுத்த வேண்டும் என, மோட்டார் வாகன அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பாதுகாப்பு பணியில் இரண்டாம் கட்டமாக ஒன்பது டி.எஸ்.பி.,க்கள், 30 இன்ஸ்பெக்டர்கள், 95 எஸ்.ஐ.,க்கள் உட்பட 1,290 போலீசார் ஈடுபடுகின்றனர்.

பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் வழியில், பாதையோரம் வரும் குரங்கு, மலை அணில் போன்றவற்றுக்கு பக்தர்கள் உணவு கொடுக்கக்கூடாது என்றும், சில நேரங்களில் அவை பக்தர்களை தாக்க கூடும் என்றும் வனத்துறை தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (1)

V GOPALAN - chennai,இந்தியா
27-நவ-202206:30:27 IST Report Abuse
V GOPALAN Highest Busfare from Kottayam to Neelakkal and Neelakkal to Sannidhanam. Tamilnadu CM should Kerala CM and to speak in Malayalam to control 200 percent increase over 2 years
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X