'உங்கள் இல்லம் தேடி வருகிறேன்' திட்டத்தை, அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம் தொடங்கியுள்ளார். தொகுதி மக்களின் வீட்டுக்கு சென்று, குறை கேட்டு தீர்வு காண்பது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இதன்படி டி.என்.பாளையம் யூனியன் புஞ்சைதுறையம்பாளையம் பஞ்., எருமைகுட்டை மற்றும் அண்ணா நகர் பகுதிகளில், மக்களிடம் குறை கேட்டார். அவற்றுக்கு தீர்வு காணும் பொருட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மொபைல்போனில் தொடர்பு கொண்டு அறிவுறுத்தினார். பெரும்பாலானேர் குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கேட்டனர். வீரன் என்ற மாற்றுத்திறனாளி, செயற்கை கால் கேட்டார். உடனடியாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை தொடர்பு கொண்ட எம்.எல்.ஏ., செயற்கை கால் பொருத்துவதற்கு உண்டான நடவடிக்கை எடுத்தார்.
எம்.எல்.ஏ.,வுடன் ஒன்றிய செயலாளர் சிவபாலன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நவமணி கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., சுப்பிரமணியம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.