ஈரோடு, நவ. ௨௭-
சென்னை யுனைடெட் எக்ஸிபிஷன்ஸ் நிறுவனம் சார்பில், ஈரோட்டில், பழையபாளையம், சக்தி துரைசாமி திருமண மாளிகையில், ௨௫ம் தேதி தொடங்கிய, தி ஜூவல்லரி எக்ஸ்போ கண்காட்சி, இன்றுடன் முடிகிறது. காலை, ௧௦:௦௦ மணி முதல் இரவு, ௮:௦௦ மணி வரை நடக்கும். கண்காட்சியை லோட்டஸ் குழுமம், டெக்ஸ்வேலி குழுமம் இயக்குனர் தனலட்சுமி பெரியசாமி ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார்.
பல்வேறு பெருநகரங்ளை சேர்ந்த ஜூவல்லரி நிறுவனங்களின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தங்கம், வைரம், வெள்ளி, முத்து நகைகள், குந்தன், மீனாகரி, போல்கி, ஜடவ், ரூபி, எமரால்டு மற்றும் கிஃப்ட் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையிலான நகைகள், ௬௦ அரங்குகளில் இடம் பெற்றுள்ளன.
பழமையான மாடல் முதல் நவீன மாடல் வரையிலான நகைகள், கடைகளில் விற்பனை செய்யப்படாத நவீன மாடல் டிசைன்கள், திருமணம் மற்றும் விசேஷங்களுக்கான பிரத்யேக நகைகள், கைவேலைப்பாடுகளுடன் கூடிய நகைகள், இளம் பெண்களுக்கான புதிய டிசைன் நகைகள் என எண்ணற்ற டிசைன்களில் விற்கப்படுகின்றன.