ஈரோடு, நவ. 2௭-
ஈரோடு சுதா மருத்துவமனையில், பெண் கர்ப்ப பையில் இருந்த, 8 கிலோ எடை கொண்ட நார்கட்டியை, அறுவை சிகிச்சை மூலம், மருத்துவ குழுவினர் அகற்றினர்.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த, 50 வயது பெண்ணுக்கு, செயற்கை கருத்தரித்தல் மூலம் பெண் குழந்தை பிறந்தது. தற்போது இவரின் மகளுக்கு, 18 வயதாகிறது. அந்த, 50 வயது பெண் அடி வயிறு வீக்கத்தால், ஈரோடு சுதா பல துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஸ்கேன் செய்ததில், கர்ப்ப பையில், 25 செ.மீ., அளவுக்கு கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. அனைத்து வகை பரிசோதனையில், நார்கட்டி (பெப்ராய்டு) என்பதை உறுதி செய்தனர்.
மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரும், மகப்பேறு மருத்துவருமான தனபாக்கியம் தலைமையில், மருத்துவர் தீபிகா, அறுவை சிகிச்சை மருத்துவர் சதீஷ், மயக்கவியல் மருத்துவர் சரவிந்த் குழுவினர், அறுவை சிகிச்சை மூலம், 8 கிலோ எடை கொண்ட கட்டி, கர்ப்பப்பையை அகற்றினர். தற்போது பெண் நலமாக உள்ளார்.