தூத்துக்குடி: தூத்துக்குடி எம்.பி.,யும், திமுக.,வின் துணை பொதுச்செயலாளராக கனிமொழி, தூத்துக்குடி குறிச்சி நகர் பகுதியில், வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளார். கனிமொழி வீட்டில் இருக்கும் போது நேற்று நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவர் உள்ளே புகுந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிப்காட் போலீசில், கனிமொழி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும் போலீசார், சந்தேகத்தின் பேரில் தூத்துக்குடியை சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து கனிமொழி வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.