சென்னை: சென்னை அடுத்த வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த புட்டாளா ஓம் கிரிஸ் என்பவர் பிடெக் படித்து வந்தார். இன்று கல்லூரிக்கு வந்த அவர், 6 வது மாடியில் இருந்து குதித்தார். இது குறித்து அங்கிருந்தவர்கள் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அந்த மாணவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.