வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் சந்தர்பூர் ரயில் நிலையத்தில் நடைமேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 15 பேர் வரை காயம் அடைந்தனர்.
![]()
|
மகாராஷ்டிரா மாநிலம் சந்தர்பூர் அருகே உள்ள பல்லார்ஷா சந்திப்பு ரயில் நிலையத்தில் 60 அடி உயரம் உடைய நடைமேம்பாலம் ஒன்று உள்ளது.பல்லார்ஷா ரயில் நிலையம், தெலுங்கானா மாநிலத்திற்கு செல்லும் பாதையில் சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள கடைசி சந்திப்பாகும். இந்த நடைமேம்பாலத்தை மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இன்று ( 27 ம் தேதி) மாலை 5.10 மணியளவில்ஒன்றாவது மற்றும் இரண்வாது ரயில் பாதையை கடப்பதற்காக பயன்பாட்டில் இருந்து நடைமேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இச்சம்பவத்தில் சுமார் 13 பேர் முதல் 15 வரை காயம் அடைந்தனர். மேலும் 8 பேர் வரையில் படுகாயம் அடைந்துள்ளனர்.
![]()
|
முன்னதாக கடந்த 2014 ம்ஆண்டில் மாநிலத்தில் பா.ஜ., ஆட்சியில் இருந்த நேரத்தில் பல்லார்ஷா ரயில் நிலையம் நாட்டின் நம்பர் ஒன் என்ற பட்டத்தை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.