வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லக்னோ:மீரட்டில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியைக்கு ஐ லவ் யூ கூறி பாலியல் தொல்லை தந்த மாணவர்களின் வீடியோ வைரலானது.
![]()
|
உ.பி.,மாநிலம் மீரட்டில் இரு பாலர் பயிலும் பள்ளி ஒன்றில் பெண் ஆசிரியை ஒருவர் பணிபுரிந்து வருகிறார். அவருடைய வகுப்பில் சம்பவத்தன்று பாடம் எடுத்து கொண்டிருந்த போது வகுப்பில் இருந்த மாணவர்களான அமன், கைஃப், அதாஷ் ஆகிய மூன்று மாணவர்கள் ஐலவ் யூ என்று கூறி கலாய்த்துள்ளனர். இதனால் அதிர்ந்து போன ஆசிரியை மாணவர்களிடம் இது போன்று நடந்துகொள்வது தவறு என பக்குவமாக எடுத்து கூறியும் ஆசிரியையின் சொல்லை மதியாமல் தொடர்ந்து ஐ லவ் யூ என்று கூறி, அநாகரீகமாக நடந்து கொண்டனர். இதனால் ்அவமானம் தாங்காமல் ஆசிரியை வகுப்பறையை விட்டு வெளியேறினார்.
இதனால் பொறுமை இழந்த ஆசிரியை மாணவர்கள் மற்றும் மாணவர் ஒருவரின் சகோதரி மீது இச்சம்பவம் குறித்து மீரட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் மாணவர்களின் மீது வழக்கு பதிவு செய்தனர். மாணவர்கள் மைனராக இருப்பதால் அதற்கான பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக மீரட் போலீஸ் இன்ஸ்பெக்டர் கேசவ் குமார் தெரிவித்துள்ளார்.
![]()
|
முன்னதாக ஆசிரியையிடம் ஐலவ்யூ என்று கூறும் மாணவர்களில் ஒருவனான அமான் என்பவரின் சகோதரியும் அதே வகுப்பில் பயின்று வந்துள்ளார். அவரும் மற்றும் சில மாணவிகளும் இந்தஅநாகரீக செயலை ரசித்து சிரிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.