மைசூரு: பஸ்நிலையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கூரையை கண்ட எம்.பி.ஒருவர் அதனை மாற்றப்பட வேண்டும் இல்லையேல் இடிக்கப்படும் என கூறியதை அடுத்து அதே கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.,மதிப்பளித்து விரைவாக மாற்றி அமைத்தார்.
![]()
|
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்திற்கு உட்பட்டது கொல்லேகலா என்னும் பகுதி கேரள மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ளது. இதன் தொகுதி எம். எல்.ஏ.வாக இருப்பவர் பா.ஜ.,வின் எம்.எல்.ஏ.,ராம்தாஸ். இவர் இப்பகுதியில் பஸ் ஸ்டாப் ஓன்றை புணரமைத்தார். பஸ் ஸ்டாப் மேற் கூரையில் மூன்று டும்கள் ( கூரைகள்) இருக்கும் படி வடிவமைத்தார். இது பார்ப்பதற்கு மசூதி போன்று இருந்துள்ளது.
இதனை கண்ட பா.ஜ.,எம்.பி.,யான பிரதாப் சிம்ஹா உடனடியாக பொறியாளர்களை அழைத்து பஸ் ஸ்டாப்பில் உள்ள டூம்களை மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் அகற்ற வேண்டும். அப்படி இல்லைஎன்றால் நானே ஜே.சி.பி., மூலம் இடித்து தள்ளுவேன் எனகூறியதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து சமூக வலை தளங்களிலும் பதிவிட்டு இருந்தார்.
எம்.பி.,யின் கருத்து பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என எதிர்க்கட்சிகள் உட்பட பலர் விமர்சித்து இருந்தனர்.
இதனையடுத்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மைசூரு நகர கார்ப்பரேஷன் மற்றும் கர்நாடகா ரூரல் இன்ஃபராஸ்டரக்சர் டெவலப்மெண்ட் லிமிடடெ் ஆகியவற்றுக்கு இது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதில் இந்த கட்டமைப்பு வகுப்பு வாத பிரச்னைகள உருவாக்கும் விதமாக உள்ளதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் நெடுஞ்சாலை நிர்வாகச் சட்டம் 2003 இன் படி நடவடிக்கை தொடங்கப்படும்" என்று குறிப்பிட்டு இருந்தது. மேலும் இது சம்பந்தமாக மேல் நடவடிக்கை எடுக்க ஒரு வார கால அவகாசம் அளித்தது.
இந்நிலையில் பஸ்நிலையத்தை வடிவமைப்பு குறித்து எம்.எல்.ஏ., ராமதாஸ் முதலில் மறுத்துள்ளார். பின்னர் கட்சியினருக்கு மதிப்பளிக்கும் வகையில் பஸ் நிலையத்தில் மாற்றத்தை செய்ய முடிவு செய்தார். தொடர்ந்து அவர் கூறுகையில் மைசூரின் பாரம்பரியத்தை மனதில் வைத்து பேருந்து நிறுத்தத்தை வடிவமைத்தேன். மைசூரு முழுவதும் 12 பேருந்து நிறுத்தங்களை மாதிரி அரண்மனையாக அமைத்துள்ளேன். ஆனால் அதற்கு வகுப்புவாத நிறம் கொடுக்கப்பட்டது, அது என்னை காயப்படுத்தியது. யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மக்கள் வேறுவிதமாக உணரக்கூடாது. வளர்ச்சியின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார். தொடர்ந்து சர்ச்சைக்குரிய குவிமாடம் மாற்றம் செய்யப்பட்டது.
![]()
|
குவிமாடம் மாற்றம் செய்யப்பட்டது குறித்து சமூக வலை தளத்தில் பதிவிட்டு இருந்த பா.ஜ., எம்.பி., என்னுடைய வார்த்தையை காப்பாற்றிய மாவட்ட கலெக்டருக்கும், யதார்த்தத்தை புரி்ந்து கொண்ட எம்.எல்.ஏ., ராம்தாசுக்கும் நன்றி என பதிவிட்டு உள்ளார்.