கோவை:தமிழ்நாடு வேளாண் பல்கலை அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில், மசாலாப்பொடிகள், ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி, 29, 30ஆகிய இரண்டு நாட்கள் அளிக்கப்படுகிறது.
பயிற்சி காலை, 9:30 முதல் 5:00 மணி வரை நடைபெறும். மசாலாப்பொடிகள், தயார்நிலை பேஸ்ட், காளான் ஊறுகாய், வாழைப்பூ ஊறுகாய், பாகற்காய் ஊறுகாய், கத்தரிக்காய் ஊறுகாய், வெங்காய ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்படும்.
ஆர்வமுள்ளவர்கள், 1770 ரூபாய் கட்டணமாக பயிற்சியின் முதல் நாளன்று செலுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 94885-18268/0422-6611268 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.