ஆலாந்துறை:ஆலாந்துறையில் உள்ள சித்தி விநாயகர், ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.
இக்கோவிலில் கும்பாபிஷேக விழா, கடந்த 25ம் தேதி தீர்த்தக்குடம் எடுத்தலுடன் துவங்கியது. நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு, திருப்பள்ளி எழுச்சியும், காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால வேள்வி பூஜையும் நடந்தது.
காலை, 8:30 மணிக்கு, பட்டிநாயகர் சைவ நெறி அறக்கட்டளையின் தலைவர் லட்சுமிபதி ராசு தலைமையில், விமான கோபுரத்திற்கும், சித்தி விநாயகர் மற்றும் ஸ்ரீதேவி கருமாரியம்மனுக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.