குஜராத் சட்டசபை தேர்தலில் 139 பெண்கள் மட்டுமே போட்டி

Updated : நவ 27, 2022 | Added : நவ 27, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
ஆமதாபாத்:குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 1,621 வேட்பாளர்களில், 139 பெண்கள் மட்டுமே களத்தில் உள்ளனர். மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கையில் பெண்களின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாக இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்த மாதம், 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சட்டசபை

ஆமதாபாத்:குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 1,621 வேட்பாளர்களில், 139 பெண்கள் மட்டுமே களத்தில் உள்ளனர். மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கையில் பெண்களின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாக இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.



latest tamil news


குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்த மாதம், 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் நடக்கிறது.

ஆளும் கட்சியான பா.ஜ., மற்றும் காங்கிரஸ்,ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் உட்பட தேசிய மற்றும் மாநில கட்சிகள் களம் இறங்கியுள்ளன.

மொத்தம் உள்ள 182 தொகுதிகளிலும் 1,621 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 139 பேர் மட்டுமே பெண்கள்.

அதிலும் 56 பெண்கள் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர். அரசியல் கட்சிகள் 83 பெண்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கியுள்ளன.

பா.ஜ., - 18, காங்கிரஸ்- 14, ஆம் ஆத்மி - 6, பகுஜன் சமாஜ் -- 13, மஜ்லிஸ்- - இ- - இத்தே ஹாதுல் முஸ்லிமின் - 2 பெண்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கியுள்ளன.


latest tamil news


கடந்த 2017ல் நடந்த தேர்தலில் பா.ஜ., 12 பெண்களுக்கும், காங்கிரஸ் 10 பெண்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கியிருந்தன.

இரு கட்சிகளும் இந்த முறை அதைவிட அதிகமாகவே பெண்களுக்கு வாய்ப்பு வழங்கி இருந்தாலும், மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கையில் கணக்கிடும்போது 139 பெண்கள் என்பது மிகவும் குறைவாக உள்ளதாக, அரசியல் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (4)

28-நவ-202211:56:47 IST Report Abuse
ஆரூர் ரங் மேயர் பிரியாவின் பேச்சுக்களை கேட்டால் இந்த மகளிர் ஒதுக்கீடு தேவையா எனவே தோன்றும் . பெண்களான 😉சோனியா ஜெயலலிதா கூட 10 சதவீத சீட்டுக்கு குறைவாகவே கொடுத்தது உண்மை.
Rate this:
28-நவ-202212:12:11 IST Report Abuse
அப்புசாமிபாவம்....
Rate this:
Cancel
28-நவ-202206:26:44 IST Report Abuse
அப்புசாமி அதான் ஃப்ரீயா உயர்கல்வி வரை குடுக்கப் போறாங்களாமே... படிச்சுட்டு வந்து தேர்தலில் நிப்பாங்க. காங்கிரஸ் 27 வருசமா குஜராத் பெண்களுக்கு ஒண்ணுமே செய்யலை.
Rate this:
vadivelu - thenkaasi,இந்தியா
28-நவ-202207:29:36 IST Report Abuse
vadiveluபெண்களுக்கு எல்லாம் செய்து வருவதாலும், செய்து இருப்பதாலும் அரசியலுக்கு வரும் தேவை ஏற்படவில்லை. சுதந்திரத்திற்கு பின்பு இருந்தே இவர்களுக்கு ஆர்வம் இல்லை. இப்போது 27 வருடங்களில் அவர்களில் யாருக்குமே அதிக ஆர்வம்மில்லை. இல்லையேல் காங்கிரஸ் பாதிக்கு பாதி பெண்களை போட்டியிட வைத்து இருக்குமே. தேவையுள்ள தமிழகத்திலேயே பெண்களுக்கு உரிமை அதிகம்கொடுக்கும் தி மு க 12 பேரைத்தான் நிற்க வைத்தது. குஜராத்தில் இருப்பதே 182 இடங்கள் அதில் பாஜாக 18 பெண்களை நிற்க வைத்துள்ளது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X