மதுரை: அமைச்சர் தியாகராஜனுக்கு, அவரது சொந்த தொகுதியான, மதுரை மத்திய தொகுதியிலேயே கறுப்புக்கொடி காட்ட சிலர் திட்டமிட்டிருந்த தகவல் அறிந்து, நிகழ்ச்சியை ரத்து செய்து திரும்பினார்.
![]()
|
மதுரை மத்திய தொகுதியில் பல்வேறு இடங்களில் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சிகளில் அமைச்சர் தியாகராஜன் பங்கேற்றார். மகபூப்பாளையம், அன்சாரி நகர் பகுதியில் பயனாளி ஒருவரின் வீட்டிற்கு சென்று செயற்கை கால் வழங்கும் திட்டம் இருந்தது.
![]()
|
ஆனால், அப்பகுதியில் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்ட இடம் ஒன்றை மீட்டுத் தருவதாக அமைச்சர் வாக்குறுதி அளித்திருந்ததாகவும், அதற்கு ஒரு தரப்பினர் அமைச்சர் மீது கடும் அதிருப்தியில் இருந்து கறுப்புக்கொடி காட்ட திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியானது.
இதனால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இருப்பினும், அப்பகுதியில் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு அமைச்சர் திரும்பி சென்றார்.
Advertisement