பள்ளி கல்வி இயக்குனரக கட்டடத்தில் ஈ.வெ.ரா., - அண்ணாதுரை படம்!

Updated : நவ 29, 2022 | Added : நவ 28, 2022 | கருத்துகள் (72) | |
Advertisement
சென்னை : தமிழக பள்ளிக்கல்வி இயக்குனரக பாரம்பரிய கட்டடத்தின் நுழைவு பகுதியில், ஈ.வெ.ரா., மற்றும் அண்ணாதுரையின், வண்ணம் தீட்டப்பட்ட, 'மெகா சைஸ்' படங்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இது, அரசியல் சட்டத்துக்கு மாறாக ஒரு தரப்புக்கு ஆதரவாகவும், அரசு அலுவலக விதிகளை மீறுவதாகவும் உள்ளதாக சர்ச்சை எழுந்து உள்ளது. தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி துவங்கியதில் இருந்து, பள்ளிக்கல்வி
பள்ளிக்கல்வி,  இயக்குனரகம், ஈவெரா, அண்ணாதுரை,


சென்னை : தமிழக பள்ளிக்கல்வி இயக்குனரக பாரம்பரிய கட்டடத்தின் நுழைவு பகுதியில், ஈ.வெ.ரா., மற்றும் அண்ணாதுரையின், வண்ணம் தீட்டப்பட்ட, 'மெகா சைஸ்' படங்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

இது, அரசியல் சட்டத்துக்கு மாறாக ஒரு தரப்புக்கு ஆதரவாகவும், அரசு அலுவலக விதிகளை மீறுவதாகவும் உள்ளதாக சர்ச்சை எழுந்து உள்ளது.

தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி துவங்கியதில் இருந்து, பள்ளிக்கல்வி துறையிலும் சர்ச்சைகளும், சலசலப்புகளும் ஒவ்வொரு நாளும் வழக்கமாகி விட்டன.

பள்ளிக்கல்வித் துறை வளாகத்தில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் அன்பழகனுக்கு, அலங்கார வளைவு அமைக்கவும், அவருக்கு சிலை அமைக்கவும் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.


latest tamil news


அந்த வரிசையில், புதிதாக இரண்டு மெகா சைஸ் படங்களால், பள்ளிக்கல்வித் துறை அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில், பள்ளிக்கல்வித் துறையின் பல்வேறு இயக்குனரகங்கள் உள்ள, டி.பி.ஐ., வளாகத்தில், சமீபத்தில் கட்டட சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தப் பணிகள் முடிந்த நிலையில், பள்ளிக்கல்வி இயக்குனரகம் அமைந்து உள்ள பாரம்பரிய, கட்டடத்தின் நுழைவு பகுதியில், ஈ.வெ.ரா., - முன்னாள் முதல்வர் அண்ணாதுரை ஆகியோரின் வண்ணப் படங்களை, மெகா சைசில் பள்ளிக்கல்வி அதிகாரிகள் பொருத்தி உள்ளனர்.

இந்த விவகாரம் புதிய சர்ச்சையையும், பள்ளிக்கல்வி செயல்பாடுகளில் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்திய அரசியல் சட்டத்தின்படி, பதவியேற்றுள்ள பள்ளிக்கல்வி அமைச்சரும், பள்ளிக்கல்வி அதிகாரிகளும், பள்ளி கல்வித் துறையில், ஒரு கட்சி கொள்கைகளுக்கு மட்டும் ஆதரவு அளிப்பது, அதிகார துஷ்பிரயோகம் செய்வது போல உள்ளதாக, கல்வியாளர்கள் விமர்சித்து உள்ளனர்.

மேலும், அரசியல் சட்டத்திற்கு மாறாகவும், அரசு பணியாளர் மற்றும் அலுவலக விதிகளை மீறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (72)

NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
29-நவ-202219:48:29 IST Report Abuse
NicoleThomson அய்யய்யோ மகளை கட்டிக்கிட்டா தகப்பனுக்கு காவி துண்டு போட்ருக்காங்களே? அதெல்லாம் சரி ஒவ்வொரு தமிழனின் தலையிலும் லட்ச கணக்கில் கடன் இருக்கு என்று ஆட்சியில் ஏறும்போது சொல்லிவிட்டு இப்போது அதனை பலமடங்கு ஏற்றும் வேலையை செய்து கிட்டு இருக்கீங்களே என்று யாரவது ஓட்டுப்போடும் தமிழன் கேட்டுட போறாங்க
Rate this:
Cancel
Shiva - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
29-நவ-202206:21:47 IST Report Abuse
Shiva இதே படங்கள்..........
Rate this:
Cancel
Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்
29-நவ-202204:37:24 IST Report Abuse
Palanisamy Sekar என்ன எழவோ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X