சென்னை: பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணியருக்கும் அறுவை சிகிச்சை செய்வோருக்கும் கொரோனா பரிசோதனை இனி கட்டாயமில்லை' என தமிழக பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாநில பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் மருத்துவ சேவைகள் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனருக்கு எழுதியுள்ள கடிதம்: மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, கொரோனாபரிசோதனைகள் குறித்த புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
அதன்படி காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூச்சு விடுதலில் சிரமம், சுவாசக் கோளாறு, வாசனை, சுவை இழப்பு உள்ளவர்களுக்கு மட்டும், இனி கொரோனா பரிசோதனை செய்தால் போதும்.

மருத்துவமனைகளில் சேரும் அனைத்து நோயாளிகளுக்கும் ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை செய்யத் தேவையில்லை. குறிப்பாக, அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள், கர்ப்பிணியர் உள்ளிட்டோருக்கு, அறிகுறிகள் இல்லாவிட்டால் கொரோனா பரிசோதனை அவசியமில்லை. இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், வெளிநாடுகளில்இருந்து தமிழகம் வரும் பயணியர் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண் டும். அவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தால், அருகில் உள்ள சுகாதாரநிலையங்களில் தெரிவிக்க வேண்டும்.