கோவை: கோவை மாவட்டம் சுந்தராபுரம் அடுத்த பிள்ளையார்புரத்தை சேர்ந்தவர் ரங்கன், 36; ஆசாரி. குடிப்பழக்கத்தால் மனைவி கோகிலேஸ்வரியுடன், 31 அடிக்கடி தகராறு செய்து வந்தார். நேற்று இரவு இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டது. கோகிலேஸ்வரி கிரைண்டர் கல்லை எடுத்து, ரங்கனின் தலையில் போட்டுள்ளார். படுகாயமடைந்தவரை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நள்ளிரவு பரிசோதித்த டாக்டர்கள் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். போத்தனூர் போலீசார் கோகிலேஸ்வரியிடம் விசாரிக்கின்றனர்.