ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: கவர்னர் ஒப்புதல் இல்லாமல் காலாவதியானது

Updated : நவ 28, 2022 | Added : நவ 28, 2022 | கருத்துகள் (79) | |
Advertisement
சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் சட்டசபையில் இயற்றப்பட்டுள்ள நிலையில், நேற்றோடு (நவ.,27) கடைசி நாள் முடிந்தும் கவர்னர் ஒப்புதல் கையெழுத்து போடாததால், அவசர சட்டம் அரசமைப்பு சட்ட விதிகளின்படி காலாவதியானது.இணையவழி சூதாட்டங்களை தடை செய்யும் சட்ட மசோதா சட்டசபையில் கடந்த மாதம் 19ல் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. சட்ட மசோதா தொடர்பாக
Governor Ravi, Online Gambling, Expired, கவர்னர் ரவி, ஆன்லைன் சூதாட்டம், சட்டம், காலாவதி

சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் சட்டசபையில் இயற்றப்பட்டுள்ள நிலையில், நேற்றோடு (நவ.,27) கடைசி நாள் முடிந்தும் கவர்னர் ஒப்புதல் கையெழுத்து போடாததால், அவசர சட்டம் அரசமைப்பு சட்ட விதிகளின்படி காலாவதியானது.இணையவழி சூதாட்டங்களை தடை செய்யும் சட்ட மசோதா சட்டசபையில் கடந்த மாதம் 19ல் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. சட்ட மசோதா தொடர்பாக சில விளக்கங்கள் கேட்டு கவர்னர் தமிழக அரசுக்கு சமீபத்தில் கடிதம் எழுதியுள்ளார். அதற்கு மறுநாளே தமிழக அரசு சார்பில் பதில் அனுப்பியது.latest tamil news


இந்த நிலையில் சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்குவதற்கான கடைசி நாள் நேற்றுடன் முடிவடைந்தது. இறுதிவரை கவர்னர் ஒப்புதல் கையெழுத்து போடவில்லை. இதனால், அரசமைப்பு சட்ட விதிகளின்படி சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா நேற்றுடன் காலாவதியானது. இதனால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு ஆலோசிக்க உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (79)

M Ramachandran - Chennai,இந்தியா
29-நவ-202200:06:55 IST Report Abuse
M  Ramachandran காசியில் தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, 'நாட்டின் பழமையான மொழிகளில் ஒன்றான, தமிழின் பெருமைகளை பாதுகாப்பது, 130 கோடி இந்தியர்களின் பொறுப்பு. இந்த விஷயத்தில், மொழி ரீதியான பேதங்க. கைவிட்டு, உணர்வுப் பூர்வமாக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்' என்றும் கூறி உள்ளார் இந்த பெருந்தன்மை உங்களுக்கோ உங்கள் கட்சியினருக்கோ அல்லது உங்கள் ஜாலராக்களுக்கோ வருமா? ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய கவிஞனை ஜாதி பார்த்து பிரித்து பார்க்கும் கயவர் கூட்டம். நீங்கள் அழிய தொடங்கிவிட்டேர்கள்
Rate this:
Cancel
K.n. Dhasarathan - chennai,இந்தியா
28-நவ-202222:43:41 IST Report Abuse
K.n. Dhasarathan தனி ஒரு மனிதர், எதிரில் எட்டு கோடி மக்களின் நலம், எது முக்கியம் ? ஒரு நல்ல கவர்னர் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? 1 மசோதாவின் தீவிரம் புரிந்து 35 நாட்கள் கடத்தாமல், மறுநாளே சட்ட அமைச்சரை அழைத்து விளக்கம் கேட்கலாம் . 2. தானே அந்த சந்தேகங்களுக்கு தீர்வு சொல்லி, சரி செய்ய சொல்லி இன்னும் மசோதாவை தெளிவாக்கியிருக்கலாம். 3. எதிர்க்கட்சி தலைவரை அழைத்து அல்லது அனைத்து கட்சி கூட்டம் போடா சொல்லி அவர்கள் கருத்தை அறிந்து மாற்றம் செய்யலாம். 4. தானே முன் வந்து சட்ட சபையில் முதல்வரை அழைத்து உடனே கையெழுத்து இடுகிறேன் என அறிவித்து உடனே அமைப்படுத்துங்கள் என்று அவசரப்படுத்தலாம் . 5. சட்ட அமைச்சர் தேதி கேட்குமுன் வரவைக்கலாம், இப்படி அவருக்கு தேதி கொடுக்காமல், எதிர்க்கட்சி தலைவருக்கு உடனே தேதி கொடுத்து ஆளும் கட்சி கம்பளைண்ட் வாங்க கூடாது. .
Rate this:
Ganapathy Subramanian - Muscat,ஓமன்
29-நவ-202211:53:55 IST Report Abuse
 Ganapathy Subramanianநிறைய அறிவுரை சொல்லி இருக்கிறீர்கள். இதையெல்லாம் ஒரு வருடம் வீணடித்தார்களே, அப்போது என் திராவிடியா அரசிடம் சொல்லவில்லை?...
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
28-நவ-202221:10:40 IST Report Abuse
sankar இந்த தூங்கு மூஞ்சி ஆட்டுத்தாடியால் ஒரு நன்மையும் நடக்காது.
Rate this:
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
28-நவ-202221:38:47 IST Report Abuse
sankarநீங்க ஒன்லைன் ரும்மி நீக்க கொடுத்தீர்களா அது கூட என்னவெல்லாம் கொடுத்தீங்களோ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X