சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் சட்டசபையில் இயற்றப்பட்டுள்ள நிலையில், நேற்றோடு (நவ.,27) கடைசி நாள் முடிந்தும் கவர்னர் ஒப்புதல் கையெழுத்து போடாததால், அவசர சட்டம் அரசமைப்பு சட்ட விதிகளின்படி காலாவதியானது.
இணையவழி சூதாட்டங்களை தடை செய்யும் சட்ட மசோதா சட்டசபையில் கடந்த மாதம் 19ல் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. சட்ட மசோதா தொடர்பாக சில விளக்கங்கள் கேட்டு கவர்னர் தமிழக அரசுக்கு சமீபத்தில் கடிதம் எழுதியுள்ளார். அதற்கு மறுநாளே தமிழக அரசு சார்பில் பதில் அனுப்பியது.

இந்த நிலையில் சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்குவதற்கான கடைசி நாள் நேற்றுடன் முடிவடைந்தது. இறுதிவரை கவர்னர் ஒப்புதல் கையெழுத்து போடவில்லை. இதனால், அரசமைப்பு சட்ட விதிகளின்படி சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா நேற்றுடன் காலாவதியானது. இதனால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு ஆலோசிக்க உள்ளது.