மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான 84 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதில் கொரோனா பேரிடர் இருந்து மீண்டு வராத 12 கடை உரிமையாளர்கள் வாடகை செலுத்தவில்லை கால அவகாசம் கேட்டிருந்த நிலையில் வாடகை தொகை நிலுவை வைத்திருந்த 12 கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் சீல் வைத்தது.
கால அவகாசம் கொடுக்காமல் கடைகளுக்கு சீல் வைத்ததுடன், நகராட்சிக்கு சொந்தமான கடைகள் அமைந்துள்ள பகுதியில் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பழைய பஸ் ஸ்டாண்ட்டில் நகராட்சிக்கு சொந்தமான 84 கடைகளையும் அடைத்து வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.