சேலம்: சேலத்தில் கடந்த 2017ல் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும் வன்முறையை தூண்டும் வகையிலும் பேசியதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சீமானுக்கு சேலம் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்ததை அடுத்து இன்று (நவ.,28) ஆஜரானார்.