பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே காவயல் டான்டீ தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்கு, நேற்று இரவு இரண்டு யானைகள் வந்தது. யானைகள் திடீரென குடியிருப்புகளை ஒட்டிய சாலையில், நடந்து வருவதை பார்த்த மக்கள் ஓட்டம் பிடித்தனர்.
தொடர்ந்து இரண்டு யானைகளும் வீடுகள் முன்பாக வந்து கதவுகளை தட்டியது. மக்கள் சத்தம் எழுப்பியும் யானைகள் இரண்டும் போக மறுத்து, வீடுகளையே சுற்றி வந்தது. வீடுகளை உடைத்துவிடுமோ என்ற, அச்சத்துடன் மக்கள் விடியும் வரை பீதி அடைந்தனர்.