சேலம், நவ. 28--
தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி பிறந்தநாளையொட்டி, தாரமங்கலத்தில், அண்ணா சிலைக்கு, தி.மு.க.,வினர் மாலை அணிவித்தனர். தொடர்ந்து கட்சி அலுவலகம் அருகே
கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர். தாரமங்கலம் நகர செயலர் குணசேகரன், ஒன்றிய செயலர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள், இளைஞர் அணியினர் பங்கேற்றனர். வரும், 30ல், செங்குந்தர் மண்டபத்தில் மேற்கு மாவட்ட செயலர் செல்வ
கணபதி தலைமையில் ரத்த தான முகாம்
நடக்க உள்ளதால் அனைவரும் பங்கேற்க கேட்டுக்கொள்ளப்பட்டது.
அதேபோல் சேலம், அயோத்தியாப்பட்டணத்தில், 5,000 ஏழை, எளிய மக்களுக்கு, ஒன்றிய குழு தலைவர் ஹேமலதா, தெற்கு ஒன்றிய செயலர் விஜயகுமார் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, டவுன் பஞ்சாயத்து அலுவலகம் முன், துாய்மை பணியாளர்களுக்கு தலா, 10 கிலோ அரிசி வழங்கப்பட்டது. அயோத்தியாப்பட்டணம் தெற்கு ஒன்றியம் சார்பில், மேட்டுப்பட்டியில் பள்ளி, மாணவ மாணவியருக்கு நோட்டு, புத்தகங்கள், இனிப்பு வழங்கப்பட்டன.
ஓமலுாரில், கிழக்கு ஒன்றிய செயலர் ரமேஷ் தலைமையில் கட்சியினர், 'கேக்' வெட்டி கொண்டாடினர். தொடர்ந்து பாத்திமா பள்ளியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள மாணவியருக்கு, சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. மாவட்ட கவுன்சிலர்கள் சண்முகம், அழகிரி உள்பட பலர் பங்கேற்றனர். கருப்பூரில் நகர தலைவர் லோகநாதன் தலைமை
யில் கட்சியினர் கொண்டாடினர்.