கோவை: கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் தாலுகாவில் ஆறு ஊராட்சிகளில் 4731 ஏக்கர் நிலம் தொழில் பூங்கா அமைப்பதற்காக கையகப்படுத்த உள்ளதாக தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இந்த ஆணையை வாபஸ் பெற வலியுறுத்தி அன்னூரில் இன்று ஒரு நாள் கடையடைப்புக்கு நமது நிலம் நமதே அமைப்பு அழைப்பு விடுத்தது. இதன்படி அன்னூரில் பேக்கரி, ஹோட்டல், ஜவுளி, மளிகை, பேன்சி உள்ளிட்ட நானூறு கடைகள் மூடப்பட்டுள்ளன.
மருந்து கடை பூக்கடை உள்ளிட்ட சில கடைகள் மட்டுமே திறந்து உள்ளன. அன்னூரில் சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 2000க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று(நவ.,28) உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.