புதுடில்லி: தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்ட அருண் கோயல் இன்று துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்காரை சந்தித்து பேசினார்.
தேர்தல் கமிஷனராக ஒய்வு பெற்ற மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரியான அருண்கோயல், கடந்த 19-ம் தேதி நியமிக்கப்படடார். ஜனாதிபதி திரவுபதி முர்மு இவரது நியமனத்திற்கு ஒப்புதல் அளித்தார்.
இந்நிலையில் இன்று துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்காரை அருண் கோயல் சந்தித்து பேசினார். இது மரியாதை நிமித்தனமான சந்திப்பு தான் என துணை ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
![]()
|
அருண் கோயங் நியமனம் குறித்து சர்ச்சை உச்சநீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிதது வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் அருண்கோயல், துணை ஜனாதிபதியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement