புதுடில்லி: புதுடில்லியில் காதலியை கொலை செய்து, உடலை 35 துண்டுகளாக வெட்டி கொன்ற அப்தாப் அமீன் புனவாலா இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவனை கொல்ல முயற்சி நடந்தது.
புதுடில்லியில் ஷ்ரத்தா என்ற இளம் பெண்ணை கொலை செய்து, உடலை 35 துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவத்தில் காதலன் அப்தாப் அமீன் புனவாலாவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்தாபிடம் தடயவியல் அறிவியல் மையத்தில் உண்மை கண்டறியும் சோதனை நடந்து முடிந்தது.
![]()
|
இதற்கிடையே, அப்தாபின் போலீஸ் காவல் முடிவடைந்ததை அடுத்து, அவர் புதுடில்லி ரோஹினி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அப்தாபை, 13 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி நேற்று உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் பாதுகாப்புடன் வேனில் அழைத்து வந்தனர். அப்போது இரு நபர்கள் கையில் வாளுடன் வேனை நோக்கி வந்தனர். அவர்களை போலீசார் தடுத்தனர். இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அப்தாப்பை கொல்ல முயன்றதாக இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த வாளை பறிமுதல் செய்தனர்.
Advertisement