மக்களின் அமைதி வழி போராட்டத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்: சீனாவுக்கு ஐ.நா. அறிவுறுத்தல்

Updated : நவ 28, 2022 | Added : நவ 28, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
பீஜிங்: சீனாவில் மக்கள் நடத்தும் அமைதி வழி போராட்டத்திற்கு அரசு மதிப்பளிக்க வேண்டும் என ஐ.நா. அறிவுறுத்தியுள்ளது. சீனாவில் ஒரே நாளில் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு தொற்று தடுப்பு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. நாடு முழுதும் பல்வேறு மாகாணங்களிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், 41 கோடி மக்கள் பாதிப்புக்கு
அமைதி வழி, போராட்டம், சீனா, ஐ.நா

பீஜிங்: சீனாவில் மக்கள் நடத்தும் அமைதி வழி போராட்டத்திற்கு அரசு மதிப்பளிக்க வேண்டும் என ஐ.நா. அறிவுறுத்தியுள்ளது.

சீனாவில் ஒரே நாளில் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அங்கு தொற்று தடுப்பு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. நாடு முழுதும் பல்வேறு மாகாணங்களிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், 41 கோடி மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். தங்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. இந்நிலையில் உரும்குயியில் அடுக்குமாடி கட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் பலியாயினர்.


latest tamil news



அரசின் கடுமையான சட்ட திட்டங்களால் தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். அதிபர் ஜிஜின்பிங்கை பதவி விலக வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

போராட்டம் நாடு முழுதும் தீவிரமடைந்து வரும் நிலையில் ஐ.நா. வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமைதி வழியில் போராடும் மக்களின் உணர்வுகளுக்கு சீன ஆட்சியாளர்கள் மதிப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (12)

Vaduvooraan - Chennai ,இந்தியா
29-நவ-202209:19:44 IST Report Abuse
Vaduvooraan நம்ம ஊர்ல சிவப்பு சால்வையை போர்த்திக் கொண்டு, வானத்துக்கு கீழே நடக்கிற அத்தினி விசயத்துக்கும் கண்டனம் தெரிவிச்சிகிட்டு, வர்க்கப் போர், பூர்ஷுவா, யதேச்சாதிகாரம், மக்கள் போராட்டம், வாழ்வாதாரம், அமெரிக்க ஏகாதிபத்தியம் என்று பல ஸ்டாண்டர்டு சொற்களை வைத்துக் கொண்டு அரசியல் நடத்தும் காம்ரேடுகள் யாராச்சும் பார்த்தீங்கன்னா இது பத்தின அவிங்க கருத்து என்னான்னு கேட்டு சொல்லுங்க பா
Rate this:
Cancel
cbonf - doha,கத்தார்
29-நவ-202207:17:22 IST Report Abuse
cbonf 90 % சீனா மக்கள் சீனா அரசின் மீது கடும்கோபத்தில் உள்ளனர். 50 % சீனா ராணுவம் - ராணுவப்புரட்சி செய்து சீனா அரசை கவிழ்க்க சதி செய்து வருகிறது இன்னும் 10 வருடத்திற்குள் - சீனா - ரஷ்யாவைப்போல் பலத்துண்டுகளாக உடையும்
Rate this:
Cancel
cbonf - doha,கத்தார்
29-நவ-202207:13:18 IST Report Abuse
cbonf சீனாவில் வெகுவிரைவில் ஜனநாயகம் வேரூன்றும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X