ஆமதாபாத் :குஜராத்தில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 1,621 வேட்பாளர்களில், 330 பேர் கிரிமினல் வழக்குகளில் சிக்கி உள்ளனர். இதில், அதிகபட்சமாக ஆம் ஆத்மி கட்சியினர் ௬௧ பேர் உள்ளனர்.
குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபைக்கு, டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதியில், இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் உள்ள ௧௮௨ தொகுதிகளில், ௧,௬௨௧ வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதில், பா.ஜ., சார்பில் 182, ஆம் ஆத்மி சார்பில் 181, காங்கிரஸ் சார்பில் 179 வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
![]()
|
இங்கு, தற்போது தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது. ஆளும் பா.ஜ.,வுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற தேர்தல் குறித்த அமைப்பு, குஜராத்தில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப் பின்னணி குறித்து ஆய்வு நடத்தியது.
இதன் விபரம்: குஜராத்தில், 2017 சட்டசபை தேர்தலில், குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்கள் மொத்தம் 238 பேர் போட்டியிட்டனர். டிசம்பரில் நடைபெறவுள்ள தேர்தலில், குற்றப் பின்னணி உடைய வேட்பாளர்கள் எண்ணிக்கை ௩௩௦ ஆக உயர்ந்துள்ளது.
இது, மொத்த வேட்பாளர் எண்ணிக்கையில் 20 சதவீதமாகும். இந்த பட்டியலில், பா.ஜ., வேட்பாளர்கள் 32 பேர், காங்., வேட்பாளர்கள் 60பேர் மற்றும் அதிகபட்சமாக ஆம் ஆத்மி வேட்பாளர்கள் 61 பேர் உள்ளனர். இவர்களில், ௧௯௨ வேட்பாளர்கள் கொலை, பாலியல் பலாத்காரம், கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளனர்.
இதிலும் அதிகபட்சமாக ஆம் ஆத்மி 43, காங்கிரஸ் 28 மற்றும் பா.ஜ., 25 பேர் என உள்ளனர்.
ஆமதாபாத் மாவட்டத்தில் உள்ள தஸ்க்ராய் தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளர் கிரண் படேல் மீது, கொலை வழக்கு உள்ளது. பதான் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கிரித் படேல் மீது, கொலை முயற்சி வழக்கு உள்ளது.
பாஞ்ச்மஹல் மாவட்டத்தில் ஷெஹ்ரா தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் ஜெத்தா பர்வாத் மீது, பாலியல் பலாத்காரம், ஆள்கடத்தல் உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement