ஜம்மு,: ஜம்மு - காஷ்மீரில் 700 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இஸ்லாமிய மதகுருவான இமாம் உட்பட நான்கு பேர் பலியாகினர்.ஜம்மு - காஷ்மீரில் ராம்பன் மாவட்டத்தில் உள்ள சங்கல்தன் கிராமத்தில் இருந்து ஜம்முவுக்கு, 32 வயது இமாம் மற்றும் அவரது குடும்பத்தினர் மூன்று பேர் காரில் சென்றனர்.
ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில், உதம்பூர் மாவட்டத்திலுள்ள ப்ரேம் மந்திர் கிராமத்திற்கு அருகே வந்தபோது, கார் 700 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில், இமாமும்,
அவரது 65 வயது தந்தையும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தகவலறிந்து அங்கு விரைந்த மீட்பு படையினர், மற்றவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், செல்லும் வழியிலேயே இமாமின் 60 வயது தாயும், 16 வயது உறவினரும் உயிரிழந்தனர்.இந்த விபத்து குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.