பெங்களூரு: கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவதாக வெளியான செய்தியை தொடர்ந்து இன்று முதல்வர் பசவராஜ் பொம்மை, பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவை டில்லியில் சந்தித்து பேசினார்.
கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை அமைச்சரவையில் 6 இடங்கள் காலியாக உள்ளன. இதையடுத்து காலியிடங்களுக்கு அமைச்சர்கள் நியமனம், மற்றும் விரிவாக்கம் செய்யப்படவில்லை. கட்சி மேலிடம் அனுமதி அளித்தால் அமைச்சரவை விரிவாக்கம் செய்வதாக பசவராஜ் பொம்மை கூறி வந்தார்.
![]()
|
இந்த நிலையில் டில்லி சென்றுள்ள முதல்வர் பசவராஜ் பொம்மை, இன்று பா.ஜ. தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து பேசுகிறார். பின்னர் அமைச்சரவையில் யார் யார் இடம் பெறுவர் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. எனினும் குஜராத் தேர்தல் முடிவுக்கு பிறகே கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் இருக்கும் என மூத்த தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement