கோழிக்கோடு: கேரளாவில் பெற்றோர்களால் பிரித்து வைக்கப்பட்ட பெண் ஓரின சேர்க்கை தம்பதியினர், ஐகோர்ட் உத்தரவால் மீண்டும் ஒன்றிணைந்தனர்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த அதிலா நஸ்ரின், பாத்திமா நூரா, இருவரும் சவுதி அரேபியாவில் சந்தித்து நட்பாக பழகி வந்துள்ளனர். நாளடையில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. திருமணம் செய்து கொள்ள கேரளா வந்தனர்.
இவர்களின் முறையற்ற உறவு, மற்றும் திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த மே மாதம் இருவரும் பிரிந்து வாழ நேரிட்டது.

இது தொடர்பாக கேரள ஐகோர்ட்டில் தொடந்த வழக்கில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமல்ல என உச்சநீதிமன்றம் 2018-ல் தீர்ப்பளித்தது.
இதன் அடிப்படையில் இருவரும் மீண்டும் ஒன்றாக சேர்ந்து வாழலாம் என சாதகமான தீர்ப்பு கிடைத்ததையடுத்து அலுவா என்ற இடத்தில் மணக்கோலத்தில் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டனர். கையில் கேக்குடன் இருவரும் போட்டோ சூட்டு எடுத்து மகிழ்ந்தனர். தங்களின் புகைபடங்களை இன்ஸ்டாகிராமிலும் பதிவேற்றினர். இப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.