கமிஷன் எதிர்பார்க்கும் அதிகாரிகள்: ஆமை வேகத்தில் நடக்கும் பணி

Added : நவ 29, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
''ஆமை வேகத்துல பணிகள் நடக்குல்லா...'' என, கருப்பட்டி காபிக்கு 'ஆர்டர்' கொடுத்தபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அண்ணாச்சி.''எந்த வேலையை சொல்றீர் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''கோவையில விமான நிலைய விரிவாக்கம், மேற்கு புறவழிச்சாலை, ரயில்வே மேம்பாலங்கள் கட்டுறதுன்னு பல வேலைகள் நடக்க இருக்கு... இந்த திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்த தனித்தனியா டி.ஆர்.ஓ., தாசில்தார்,
கோவை, விமான நிலைய விரிவாக்கம்,டிஆர்ஓ, தாசில்தார், சர்வேயர்கள்


''ஆமை வேகத்துல பணிகள் நடக்குல்லா...'' என, கருப்பட்டி காபிக்கு 'ஆர்டர்' கொடுத்தபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அண்ணாச்சி.


''எந்த வேலையை சொல்றீர் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.


''கோவையில விமான நிலைய விரிவாக்கம், மேற்கு புறவழிச்சாலை, ரயில்வே மேம்பாலங்கள் கட்டுறதுன்னு பல வேலைகள் நடக்க இருக்கு... இந்த திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்த தனித்தனியா டி.ஆர்.ஓ., தாசில்தார், சர்வேயர்களை அரசு நியமிச்சிருக்கு வே...


latest tamil news

''இழப்பீடு வழங்க, 1,000 கோடி ரூபாய்க்கு மேல நிதியையும் ஒதுக்கீடு செஞ்சிருக்கு... ஆனா அதிகாரிகள், நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு நிர்ணயிக்கிறதுலயும், வழங்குறதுலயும் பெரிய அளவுல கமிஷன் கேட்காவ வே...


''பலரும் கமிஷன் தர மறுத்துட்டதால, நிலங்களை கையகப்படுத்துறது வருஷக் கணக்கா இழுத்துட்டே போவுது... 'இந்த மாதிரி வேலைக்கு நேர்மையான அதிகாரிகளை போட்டா தான், காரியம் சீக்கிரமா நடக்கும்'னு வருவாய் துறையிலயே பேசிக்கிடுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (1)

sugumar s - CHENNAI,இந்தியா
29-நவ-202217:16:51 IST Report Abuse
sugumar s Govt. machinery has become so bad. One day the person processing salary for officers in Govt. will process salary for all only if some % of the salary is given to him as commission.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X