''ஆமை வேகத்துல பணிகள் நடக்குல்லா...'' என, கருப்பட்டி காபிக்கு 'ஆர்டர்' கொடுத்தபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அண்ணாச்சி.
''எந்த வேலையை சொல்றீர் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''கோவையில விமான நிலைய விரிவாக்கம், மேற்கு புறவழிச்சாலை, ரயில்வே மேம்பாலங்கள் கட்டுறதுன்னு பல வேலைகள் நடக்க இருக்கு... இந்த திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்த தனித்தனியா டி.ஆர்.ஓ., தாசில்தார், சர்வேயர்களை அரசு நியமிச்சிருக்கு வே...
![]()
|
''இழப்பீடு வழங்க, 1,000 கோடி ரூபாய்க்கு மேல நிதியையும் ஒதுக்கீடு செஞ்சிருக்கு... ஆனா அதிகாரிகள், நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு நிர்ணயிக்கிறதுலயும், வழங்குறதுலயும் பெரிய அளவுல கமிஷன் கேட்காவ வே...
''பலரும் கமிஷன் தர மறுத்துட்டதால, நிலங்களை கையகப்படுத்துறது வருஷக் கணக்கா இழுத்துட்டே போவுது... 'இந்த மாதிரி வேலைக்கு நேர்மையான அதிகாரிகளை போட்டா தான், காரியம் சீக்கிரமா நடக்கும்'னு வருவாய் துறையிலயே பேசிக்கிடுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.