'ஸ்டெர்லைட்' ஆலையை திறக்க முதல்வர் அலுவலகத்தில் மனு

Added : நவ 29, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
சென்னை: துாத்துக்குடி 'ஸ்டெர்லைட்' ஆலைக்கு எதிராக நடந்த துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட நபர்கள், அரசு வேலை வழங்க கோரி மனு அளித்துள்ளனர்.இதுகுறித்து, ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட நபர்கள் அளித்த பேட்டி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் காரணமாக, அந்த ஆலை நான்கு ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. இதனால்,
Sterlite Copper,Sterlite,ஸ்டெர்லைட்

சென்னை: துாத்துக்குடி 'ஸ்டெர்லைட்' ஆலைக்கு எதிராக நடந்த துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட நபர்கள், அரசு வேலை வழங்க கோரி மனு அளித்துள்ளனர்.


இதுகுறித்து, ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட நபர்கள் அளித்த பேட்டி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் காரணமாக, அந்த ஆலை நான்கு ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. இதனால், துாத்துக்குடியை சுற்றியுள்ள, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.


மேலும், போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலருக்கு, அரசு வேலை வழங்கி உள்ளது; பலருக்கு வழங்கவில்லை. ஆலை மூடியதால், வருமானம் இல்லாமல் மிகுந்த சிரமப்படுகிறோம். மருத்துவச் செலவுக்கு கூட, எங்களிடம் பணம் இல்லை; குடும்பத்தை நடத்தவும் வழியில்லை.


எனவே, பாதிக்கப்பட்ட எங்களுக்கு, அரசு வேலை வழங்க கோரிக்கை வைத்து, முதல்வர் தனிப் பிரிவில் மனு அளித்துள்ளோம். மேலும், ஸ்டெர்லைட் ஆலையை நம்பி இருந்த, 1 லட்சம் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இழந்த வாழ்வாதாரத்தை மீட்க, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும். இதற்கு, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (10)

jayvee - chennai,இந்தியா
29-நவ-202217:21:14 IST Report Abuse
jayvee ஆட்சியை எப்படியாவது பிடிக்கவேண்டும் என்று துடித்து ஸ்டெர்லிட் விவகாரத்தை பெரிதாக்கி ஆட்சிக்கு வந்தாகிவிட்டது.
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
29-நவ-202213:53:21 IST Report Abuse
sankaranarayanan பெட்டிகள் செல்லும் இடங்களுக்கு சென்றுவிட்டன இனி கால தாமதம் இல்லாமல் அதி விரைவில் ஆலை திறக்க ஏற்பாடு நடந்துகொண்டிருக்கிறது காத்திருங்கள் விரைவில் நல்ல செய்தி வரும் வரும் வரும்
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
29-நவ-202211:52:07 IST Report Abuse
duruvasar கொடுத்த வேலையை அழகாக செய்து முடித்த நீதியரசருக்கு காட்டும் நன்றி கடனா இது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X