குரங்கு அம்மை இனி 'எம் பாக்ஸ்': உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

Added : நவ 29, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
லண்டன்: குரங்கு அம்மை நோய்க்கு 'எம் பாக்ஸ்' என்ற புதிய பெயரை உலக சுகாதார அமைப்பு சூட்டியுள்ளது.இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 1958ல் ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் இந்த நோய் குறித்து ஆராய்ச்சி நடத்தி குரங்கு அம்மை என்ற பெயர் சூட்டப்பட்டது.இழிவு:ஆனால் குரங்கு அம்மை என்ற பெயர் ஆப்ரிக்க கண்டத்தை இனரீதியில் இழிவுபடுத்துவதாக
Monkeypox,mpox,WHO,குரங்கு அம்மை,எம் பாக்ஸ்

லண்டன்: குரங்கு அம்மை நோய்க்கு 'எம் பாக்ஸ்' என்ற புதிய பெயரை உலக சுகாதார அமைப்பு சூட்டியுள்ளது.


இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 1958ல் ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் இந்த நோய் குறித்து ஆராய்ச்சி நடத்தி குரங்கு அம்மை என்ற பெயர் சூட்டப்பட்டது.



இழிவு:


ஆனால் குரங்கு அம்மை என்ற பெயர் ஆப்ரிக்க கண்டத்தை இனரீதியில் இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளது. இந்த நோய் ஆப்ரிக்க நாடுகளில் இருந்துதான் பரவுவதாகவும் அறியப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொற்று விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது என்பதே உண்மை.


latest tamil news

எனவே 'குரங்கு அம்மை என்ற பெயருக்கு பதிலாக இந்த தொற்று நோய்க்கு வேறு பெயர் சூட்ட வேண்டும்' என உலகில் பல நாடுகள் கோரிக்கை விடுத்திருந்தன. இதன் அடிப்படையில் பல்வேறு விஞ்ஞானிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து குரங்கு அம்மை நோய் இனி 'எம் பாக்ஸ்' என அழைக்கப்படும்.



2 ஆண்டு:


அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு குரங்கு அம்மை மற்றும் எம் பாக்ஸ் பெயர்கள் இரண்டும் பயன்படுத்தப்படும். அதன் பின் எம் பாக்ஸ் என்ற பெயர் மட்டுமே பயன்படுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (2)

mindum vasantham - madurai,இந்தியா
29-நவ-202211:04:15 IST Report Abuse
mindum vasantham புதிய புதிய நோய்கள் சிலர் பரப்புகின்றனர் அமெரிக்கா வல்லாதிக்க பேரரசு ஆதிக்கம் ஒழிந்தால் தான் வெள்ளையர்களிடம் இருந்து உண்மையான விடுதலை உலகம் பெரும்
Rate this:
Cancel
Dhandapani - Madurai,இந்தியா
29-நவ-202206:59:11 IST Report Abuse
Dhandapani பெயர்மாதீட்ட குரங்கம்மை ஒழிஞ்சிரும இதை இரண்டாண்டுகள் ஒழிக்கப்படவேண்டும் சார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X