திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், 'சிசிடிவி' கேமரா பொருத்த, கோபுர சிற்பம் உடைக்கப்பட்டது, பக்தர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், பக்தர்கள் வருகையை கண்காணிக்க ஒன்பது கோபுரங்கள் மற்றும் கோவில் வளாகம் முழுதும், 50க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், தெற்கு பக்கத்திலுள்ள திருமஞ்சன கோபுரத்தின் அருகிலுள்ள கட்டை கோபுரத்தில், கோவிலுக்குள் வரும் பக்தர்களை கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
![]()
|
அதற்காக, சிற்பத்தின் முகத்தில், ஆணி வைத்து துளையிட்டு, அதை உடைத்து சேதப்படுத்தி, கேமரா பொருத்தப்பட்டது. மேலும், சிற்பத்தின் உடைந்த முக பாகம் அங்கேயே கிடக்கிறது. இதைக்கண்ட, விஸ்வ ஹிந்து பரிஷத் தொண்டர்கள், சிற்பத்தை சேதப்படுத்தி, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டதை கண்டித்து குரல் எழுப்பினர்.
இதையடுத்து, கோவில் நிர்வாகம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை அகற்றி, அதன் அருகில் கோபுரத்தில் துளையிட்டு பொருத்தியுள்ளது. விலை மதிக்க முடியாத கோபுரம் மற்றும் அதிலுள்ள உன்னத சிற்பங்களை சேதப்படுத்தியது, பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.