'மனுவை கையால கூட தொட மாட்டேங்கறார் ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''எந்த துறை விவகாரம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''சென்னை எழும்பூர்ல, சி.எம்.டி.ஏ., அலுவலகம் இருக்கோல்லியோ... இங்க, 800க்கும் மேற்பட்ட அதிகாரிகள், பணியாளர்கள் வேலை பாக்கறா ஓய்...
![]()
|
''பணியாளர் சங்க நிர்வாகிகள், தங்களுக்கு இருக்கற பொதுவான பிரச்னைகளை உயர் அதிகாரியிடம் முறையிட, மனுவா எழுதி எடுத்துண்டு போயிருக்கா ஓய்... அதிகாரியோ, குறைகளை வாய்மொழியா மட்டும் கேட்டுண்டு, மனுவை கையால கூட தொடாம திருப்பி அனுப்பிட்டாராம்... விரக்தியில இருக்கற பணியாளர்கள், தலைமைச் செயலர் கவனத்துக்கு விஷயத்தை கொண்டு போக போறா ஓய்...'' என்றார் குப்பண்ணா.
மொபைல் போனை பார்த்த அந்தோணிசாமி, ''அன்சுல் மிஸ்ரா மெசேஜ் பண்ணியிருக்காரு...'' என முணுமுணுத்தார்.